விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வீடூர் அணை மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூவாயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், வீடூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வீடூர் அனையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதுச்சேரியில் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.