கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள நொய்யல் ஆற்றுப் பகுதியில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், தடாகம், மலுமிச்சம்பட்டி, தொண்டாமுத்தூர், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாநகர பகுதிகளான சுந்தராபுரம், சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.