கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்களில் வெள்ள நிவாரண பணிகளுக்காக 1,800 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் நாட்டின் பல மாநிலங்களில் கடும் சேதத்தை சந்தித்தன. குறிப்பாக கர்நாடகா மற்றும் பீகாரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலங்களில் நடந்து வரும் நிவாரண பணிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். இதில் கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி கர்நாடகாவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரத்து 200 கோடி ரூபாயும், பீகார் மாநிலத்துக்கு 2 தவணையில் 613 கோடியே 75 லட்ச ரூபாய் வழங்கவும் ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.a