அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், இமெல்டா புயல் வீசியதாலும், கனமழையாலும் அந்நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கடந்த 3 தினங்களாக மிரட்டி வரும் இந்த புயலால் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.ஹூஸ்டன் நகரில் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடைபெறவுள்ள “ஹவுடி மோடி”நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தியர்களுடன் உரையாற்ற உள்ளார். தற்போது அந்நகரை புயல் தாக்கியுள்ளதால், நிகழ்ச்சி தடையின்றி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.