காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர் வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து இன்று காலை முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதை தொடர்ந்து அணையின் பாதுகாப்புக்கு கருதி ஒரு லட்சம் கனஅடி என கர்நாடகா இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தமாக 2 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

Exit mobile version