ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாற்றுத் திறனாளி பெண் தமிழக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
கரூர், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பொய்கை புதூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான கவிதாவின் தாய் மற்றும் தந்தை மிகவும் வயதானவர்கள் என்பதால்எந்த வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தனர்.இந்நிலையில் கவிதாவிற்கு தமிழக அரசு சார்பில் நாட்டு கோழி குஞ்சுகள் கொடுக்கப்பட்டது. 4 வார குஞ்சுகள் தற்போது ஒரு கிலோ வரை வளர்ந்துள்ளதாகவும், நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தால், வாழ்க்கைத் தரம் மேம்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ள கவிதா, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.