காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே தெரியபடுத்தும் Flame of Forest பூக்கள்

காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே தெரியபடுத்தும் Flame of Forest பூக்கள், நீலகிரி மாவட்டம், சேரம்பாடி வனப்பகுதிகளில் அதிகளவில் பூத்துள்ளது.

குளிர் காலம் முடிந்து, வெயில் காலம் துவங்குவதற்கு முன்பே இந்த பூக்கள், பூக்க துவங்கும். இதன் மூலம் வெயில் காலம் துவங்குவதை நாம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை இந்த பூ, பூக்க தவறினால், காலநிலையில் பெரிய மாற்றம் இருப்பதை நம்மால் உணர முடியும். ஆரஞ்சு நிறத்தில் இந்த பூக்கள் பூக்கும் போது, தூரத்தில் இருந்து பார்க்கும்போது வனத்தில் தீ எரிவது போன்று காணப்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே Flame of Forest என்று இந்த பூவுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Exit mobile version