மிட்டாய் தாத்த என்ற பெயரில் தள்ளாடும் வயதிலும் தளராமல் பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்று, மிட்டாய் விற்று வாழ்ந்துவரும் 113 வயது முதியவர்
தஞ்சாவூர் ஆடக்காரத்தெருவில் வசித்து வரும் முகம்மது அபுசாலி என்பவருக்கு வயது 113. இந்த வயதிலும் இவர் முழு ஆக்டீவாக இருப்பதுடன் தானாகவே தேங்காய், இஞ்சி,குளுகோஸ் மிட்டாய்களை தயார் செய்து பல கிலோ மீட்டருக்கு நடந்து சென்று விற்பணை செய்து வருகிறார்.
இவரைப் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் செல்லமாக மிட்டாய் தாத்தா என அழைக்கின்றனர். இது குறித்து பேசிய அபுசாலி, தான் பர்மாவை சேர்ந்தவர் என்றும் பல வருடங்களுக்கு முன் அங்கு நடந்த மிகப்பெரிய கலவரத்தில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இழந்து, கப்பலேறி இந்தியா வந்துவிட்டதாவும் தெரிவித்தார்.
பர்மாவிலிருந்து கப்பல் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்த அபுசாலி, சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் சில காலம் வாழ்ந்துவிட்டு பின்னர் தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தார்.
ஆரம்பகாலத்தில் தஞ்சாவூரிலேயே டீக்கடை ஒன்றில் வேலை பார்த்துகொண்டிருந்த முதியவர் அபுசாலியை, ஆட்டகார தெருவில் வாழ்ந்த மக்கள் அன்புடன் அரவனைத்தனர்.
பின்னர், தன் நண்பரான மிட்டாய் வியாபாரி ஒருவரிடமிருந்து, மிட்டாய் செய்யக் கற்றுகொண்ட அபுசாலி, கடந்த இருபது வருடங்களாக இந்த தொழிலை மனநிறைவோடு செய்து வருவதாகக் கூறினார்.
ஓவ்வொரு நாளும், மிட்டாய் விற்பதன் மூலம் தனக்கு 150 ரூபாய் வரைக் கிடைப்பதாகவும், அதை சேமித்து தான் சொந்தமாக இடம் வாங்கியதாகவும் மகிழ்ச்சியாக கூறுகிறார்.