பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க சேலத்தில், போலீசார் மற்றும் துணை இராணுவ படையினர் 200-க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவிகிதம் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்கு செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். இதில் மேட்டூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார்.
இதில் மேட்டூர் ,கருமலைக்கூடல் போலீசார் மற்றும் துணை இராணுவப்படையை சேர்ந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.