கொடி நாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினர்.
படைவீரர் கொடி நாள் நாடெங்கும் முப்படை வீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் கடைபிடிக்கப்படிகிறது. இதையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 1 லட்ச ரூபாய்க்கான காசோலையை சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியிடம் வழங்கி, கொடி நாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அனைத்து படை வீரர்களுக்கும், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆளுநர் பான்வாரிலால் புரோஹித் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்தநிகழ்ச்சியில், பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார், ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.