பூதலூர் அருகே பதுங்கி இருந்த கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே பதுங்கி இருந்த கூலிப்படை தலைவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் தஞ்சாவுர் மாவட்டம், ராயமுண்டான் பட்டியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் உத்தரவின் பேரில் குற்ற விசாரணை பிரிவு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், ராயமுண்டான் பட்டியில் உள்ள ஒரு தோப்பில் பதுங்கி இருந்த கூலிப்படை தலைவர் நெட்டூர் கண்ணன் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் பூதலூர் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version