கால்நடை திருவிழாவை 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் -அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தலைவாசலில் நடைபெற்ற வேளாண்மை மற்றும் கால்நடை திருவிழாவை 5 லட்சம் பேர் பார்வையிட்டு இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த வேளாண்மை மற்றும் கால்நடை திருவிழாவின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிறைவு விழாவில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த அரங்குகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் பேசிய அவர், தெற்காசியவில் மிகப்பெரிய கால்நடை பூங்காவை தலைவாசலில் அமைக்க அடிக்கல் நாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். மேலும், நடப்பாண்டிலேயே தலைவாசலில், கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version