திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள், கார் போன்றை பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பதியில் செம்மரக் கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக இன்னோவா கார் மற்றும் சரக்கு வேன் ஆகியவை சுற்றித் திரிவதை கண்டனர். வாகனங்களை மடக்கி பிடித்து போலீசார் சோதனை நடத்தியதில், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விநாயக், உமர் மற்றும் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சோமசேகர் ஆகியோரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.