விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 924 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுற்ற நிலையில், வெற்றி பெற்ற நபர்களுக்கு உடல் தகுதித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. உடல் தகுதித் தேர்வில் சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 565 பெண்களும், 4 ஆயிரத்து 321 ஆண்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 757 பேருக்கு உடல் தகுதித் தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் உயரம், மார்பளவு அளவிடுதல், ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. இரண்டாம் கட்டமாக ஆண்களுகான கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. இதில் 924 பேர் கலந்துக் கொண்டனர். மேலும் பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.