ஃபிட் இந்தியா சிலம்ப நிகழ்ச்சியில் பங்கேற்று உலக சாதனை புரிவோம்-சிலம்ப வீரர்கள்

ஃபிட் இந்தியா சிலம்ப நிகழ்ச்சியில் பங்கேற்று உலக சாதனை புரிய வேண்டுமென்ற நோக்கில் கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் சிலம்ப வீரர்கள் இரவு, பகலாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள தனியார் அகாடமியில் சிலம்பம் பயின்று வரும் 31 சிலம்ப வீரர்கள்  வரும் 25ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள ஃபிட் இந்தியா சிலம்ப நிகழ்ச்சியில் பங்கேற்று, உலக சாதனை படைப்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 10 வயது சிறுவர்கள் முதல் 15 வயதுடையவர்கள் வரை இரவு பகல் பாராமல் சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சியின் மூலம் உடல் ஆரோக்கியமாகவும், படிப்பில் முழு கவனம் செலுத்த வழிவகுப்பதாகவும் சிலம்ப வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version