தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை, மொத்தம் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும், ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் படகுகளை சீரமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.