உதகையில் கோடை சீசன் களைகட்டியதை தொடர்ந்து சுற்றுலா பாயணிகளை கவரும் வகையில் மீன்கள் அருங்காட்சியத்தை தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை தொட்டபெட்டா சாலையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மாவட்டத்திலேயே முதல் மீன்கள் அருங்காட்சியகத்தை தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. 500 வகையிலான வண்ண மீன்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புளோரா, ஜெயின்ட் கெளரா, பப்பிள்ஸ், காஷ்பர் உள்ளிட்ட சர்வதேச அளவிலான மீன்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
35 வருடங்கள் உயிர் வாழக்கூடிய ஜெயிண்ட் கெளரா மீன், மனிதர்களோடு நல்ல முறையில் பழகுவதோடு மட்டுமில்லாமல், பச்சை காய்கறிகளை மட்டுமே உணவாக உட்கொள்வதாக பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். மீன்கள் அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.