அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கிய விடியா திமுக அரசுக்கு மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு துரோகம் இழைத்துள்ள விடியா அரசை கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள், பொதுமக்கள் பங்கேற்று விடியா அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், 2020-ல் அதிமுக ஆட்சியின் போது நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட்ட மீன்பிடி துறைமுகத் திட்டத்தை விடியா அரசு முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையால் 50 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம், கருணாநிதியும், ஸ்டாலினும் வசனம் பேசியே மக்களை ஏமாற்றி விட்டதாக சாடிய அவர், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் கட்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் விடியா அரசு முடக்கிவிட்டதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு அதிமுக கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் விடியா அரசு ரத்து செய்து மக்களை வஞ்சித்துவிட்டதாகவும் அவர் சாடினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன், வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, மரக்காணம் ஒன்றிய செயலாளர் ரவிவர்மன்,மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி, ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், விழுப்புரம், திண்டிவனம் நகர செயலாளர்கள்,மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Discussion about this post