"புயலில் மாயமான மீனவர்களை போர்க்கால அடிப்படையில் தேட வேண்டும்" – ஓ.எஸ். மணியன்

புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்களை, போர்க்கால அடிப்படையில் தேட வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம் சாமந்தன்பேட்டையை சேர்ந்த இடும்பன், அவரது மகன் மணிவேல் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர், கொச்சி துறைமுகத்தில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இடும்பன் உட்பட தமிழக மீனவர்கள் 9 பேர் கடலுக்கு சென்ற நிலையில், புயலில் சிக்கி மாயமாகினர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாயமான மீனவர்கள் குறித்து மத்திய அரசும், கேரள அரசும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version