9 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கடலுக்கு செல்லவிருக்கும் நிலையில், தங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடல் சீற்றம் காரணமாக , கடந்த 9 நாட்களாக, சுமார் 2000 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி இருந்தனர்.
இந்நிலையில், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து, மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரவும் , படகுகளுக்கு ஒரு படகுத்துறையும் இராமேஸ்வரத்தில் அமைத்து தரவேண்டும் என்று மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.