அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மீனவர்கள் வரவேற்பு

மீன்பிடித் தடைக்காலத்தின் போது கூடுதலான நிவாரணத் தொகை வழங்கப்படும் எனும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மீன்வளத்தை பாதுகாக்க ஆண்டுதோறும் இன்று முதல் 61 நாட்களுக்கு தமிழக கடல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கடலூர் மாவட்டத்தில் உள்ள 64 மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. எனவே கடலூர் துறைமுகத்தில் 1000த்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடை காலத்தின் போது மீனவர்கள் படகுகளுக்கு வண்ணம் தீட்டுதல், வலை பின்னுதல் போன்ற பணிகளை செய்கின்றனர். இதையொட்டி, தமிழக அரசு தற்போது வழங்கும் நிவாரண உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து, கூடுதலாக 7 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி தரப்படும் என அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமல் ஆவதால், அதிமுகவின் இந்த அறிவிப்புக்கு மீனவர்கள் வரவேற்புதெரிவித்துள்ளனர்.

Exit mobile version