சுருக்குமடி வலையில் சிக்கி மீனவர் பலி: நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடியில் சுருக்குமடி வலையில் சிக்கி மீனவர் பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சந்திஸ்டன். சங்குக்குளி மீனவரான இவர் தனது நண்பர்களுடன் ஆழ் கடலில் சங்குக்குளி தொழிலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த விசைப்படகு மீனவர்கள் சுருக்குமுடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தொடங்கினர். சுருக்குமடி வலையில் சிக்கிய சந்திஸ்டன், கடலில் மூழ்கினார். அவரது உடலை கடலோர காவல்படை போலீசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக விசைப்படகு மீனவர் தாமஸ் உள்பட 8 பேரை தூத்துக்குடி தெற்கு காவல்நிலைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடலில் மூழ்கிய சங்குக்குளி மீனவர் சந்திஸ்டன் உடலை மீட்டு தரக்கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தக்க இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், திரேஸ்புரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version