குமரிகடல் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

குமரிகடல் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசையில் சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரிகடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேனி , திருநெல்வேலி , கன்னியாகுமரி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version