ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
இதற்காக மீன்பிடி உபகரணங்களை படகில் ஏற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல் 14ம் தேதிமுதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.
அதன்பிறகு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளை சீரமைக்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால் கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், நாளைமுதல் கடலுக்கு செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
மீன் பிடிக்க தேவையான வலைகள், ஐஸ் கட்டிகள், டீசல், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை விசைப்படகில் ஏற்றும் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.