தமிழக மீனவர்களை அச்சுறுத்திய இலங்கைக் கடற்படையினர்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொன்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்ததுடன் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுமார் 700 க்கு மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் கரை திரும்பும் போது, அங்கு 5 கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர். மேலும், 50க்கு மேற்பட்ட படகுகளிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி கருவிகளை இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் படகுகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அச்சமின்றி மீன் பிடிக்கும் வகையில் இலங்கையுடன் பேச்சு நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version