டீசல் விலையேற்றத்தால் கடலுக்கு செல்லாத மீனவர்கள்

டீசல் விலை உயர்வு, மீனவர்களுக்கான மானிய விலை டீசலை உயர்த்தி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என மீனவர் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.

60 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்து ஆழ்கடலுக்கு சென்று மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் டீசல் விலை, லிட்டருக்கு 90 ரூபாய்க்கு மேல் உயர்ந்து இருப்பதும், மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ஆயிரத்து 800 லிட்டர் டீசலை உயர்த்தி வழங்காத காரணத்தாலும், காசிமேட்டில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. முதல் நாளில் சுமார் 500க்கும் அதிகமான படகுகள் கடலுக்கு செல்வது வழக்கமாக இருந்த நிலையில், 60 படகுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version