ராமநாதபுரத்தில் பெய்ட்டி புயலால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

பெய்ட்டி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறாவது நாளாக மீன்பிடிக்க செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ஆம் தேதி பெய்ட்டி புயல் எச்சரிக்கையை அடுத்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை மற்றும் தொண்டி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின்  பெரும்பாலான துறைமுகங்களில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெய்ட்டி புயல் எச்சரிக்கையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஆறாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் ஆயிரத்து 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். மீன்பிடி தடையால் சுமார் முப்பது கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version