கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் எனவும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Exit mobile version