மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பியுள்ளதையடுத்து வெளிமாநிலங்களிலிருந்து வியாபாரிகள் குவிந்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடைவிதித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 60 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதித்திருந்தது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைகாலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.தற்போது மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட மீன்வர்கள் முதல் நாள் கடலுக்கு சென்று திரும்பியுள்ளனர். இந்த நிலையில், வெளிமாநில வியாபாரிகள் மீன்களை வாங்க அதிகளவில் குவிந்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.