அரியவகை கடல் புற்கள், கடல் பாசிகள் அழிவதால் மீனவர்கள் கவலை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரியவகை கடல் புற்கள், கடல் பாசிகள் அழிந்து வருவதால், மத்திய கடல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஆய்வு செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியவகை கடல் புற்கள் மற்றும் கடற்பாசிகள் பதப்படுத்துதலுக்கு மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. எனவே உலகச் சந்தையிலும் உள்ளூர் சந்தையிலும் இந்த பாசிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், மீனவர்கள் பாசி வளர்ப்பில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், அதிக வெப்பம் காரணமாக கடல் பாசிகள் மற்றும் புற்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. பூவி வெப்பமயமாவதாலும், கடல் நீரின் வெப்ப நிலை அதிகரிப்பாலும், கடல் பாசிகள் வளர்ச்சி குன்றிப்போய் உள்ளது. 80 முதல் 100 கிலோ வரை பாசிகள் கிடைத்த நிலையில், தற்போது 10 முதல் 20 கிலோ வரை மட்டுமே கிடைப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடலில் கொட்டப்படும் குப்பைகள், கழிவுநீர் மற்றும் பயன்படுத்த தடை செய்யப்பட்ட படகுகளாலும் கடல் புற்கள் கடற்கரைகளில் ஒதுங்கத் தொடங்கியுள்ளன. கடற்பாசி, கடற்புற்கள் அழிவு குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி மையம் ஆய்வு நடத்தி இதற்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version