டீசல் விலை உயர்வு காரணமாக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாகை மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மீன் பிடி தடைக்காலம் முடிவுற்றதை அடுத்து நாகை மீனவர்கள் 76 நாட்களுக்கு பிறகு ஜூன் 30ம் தேதி கடலுக்கு சென்றனர். வழக்கமாக தடைக்காலத்திற்கு பிறகு மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் ஆர்வத்துடன் சென்ற விசைப்படகு மீனவர்களுக்கு இம்முறை ஏமாற்றமே மிஞ்சியது. வஞ்சிரம், வவ்வால் போன்ற உயர் ரக மீன்கள் மிக குறைவாகவே கிடைத்ததால், டீசல் விலைக்கு அஞ்சி 4 நாட்களிலேயே கரை திரும்பியதாக மீனவர்கள் கூறினர். டீசல் விலையை குறைக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.