மீன்பிடி படகுகளில் மீன்துறை அதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்துறை அதிகாரிகள் மீனவர்களின் விசைப் படகுகளில் ஆய்வு நடத்தினர்.

தமிழகத்திலுள்ள 13 மாவட்டங்களில், மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. மீன்களின் இனப் பெருக்கத்திற்காக, ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14 ந் தேதி நள்ளிரவு வரை, 60 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் 83 அதிகாரிகள் குழு, கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் ஆய்வு மேற்கொண்டனர். படகுகளில் பொருத்தியுள்ள இயந்திரங்களின் குதிரைத்திறன், படகின் நீளம், அகலம், படகுகளின் திறன் ஆகியவை குறிப்பிட்டபடி இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட படகுகளின் ஆவணங்கள், காப்பீடு ஆவணங்கள் போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டன.

Exit mobile version