தடை செய்யப்பட்ட வலைகள் கொண்டு மீன் பிடிப்பதால் பாதிக்கப்படும் மீன் வளம்

மேட்டூர் அணையில் தடை செய்யப்பட்ட வலைகள் கொண்டு மீன் பிடிப்பதால் மீன் வளம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமம் பெற்று மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு நாளொன்றுக்கு 5 டன் வரை மீன்கள் சிக்கி வந்தன. இந்நிலையில் மீன் குஞ்சுகள் பெரிதாவதற்கு முன்னரே தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடித்து விடுவதால் தற்போது நாள் ஒன்றுக்கு 500 கிலோ வரை மட்டுமே மீன்கள் வலையில் சிக்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version