உலக மீன்வள தினம் – உலகிலேயே அதிக மீன்வளம் உள்ள பகுதி தமிழகம்

உலக மீன்வள நாளையொட்டி, தமிழகத்தில் மீன்பிடித் தொழிலின் நிலை குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்…

இந்தியா மீன்வளத்துறையில் சிறந்து விளங்கும் நாடாக உள்ளது. மீன்வளத்துறை மூலம் 14 மில்லியன் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. 2016-17ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியா 5.78 பில்லியன் மதிப்புள்ள மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்வளத்துறை முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

இதில் குறிப்பாக தமிழக மீன்வளத்துறையின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டத்தின் எல்லை சென்னை , திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை கடல் எல்லை நீள்கிறது. இதில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. 15 முக்கியமான துறை முகங்கள், சிறு மீன்பிடி துறைமுகங்களும் உள்ளன.

உலகிலேயே மீன்வளம் அதிகம் உள்ள பகுதியாக தமிழக கடலோர பகுதி அமைந்துள்ளது. வங்கக்கடல் , இந்திய பெருங்கடல், அரபிக்கடல் சங்கமிக்கும் மன்னார் வளைகுடா பகுதி மீன்வளம் மிகுந்த பகுதியாக உள்ளது.

தமிழகத்தில் ஏரி , குளம், குட்டை , ஆறுகள் , கடல் என அனைத்து வகையான நீர் ஆதாரங்களிலும் 2 ஆயிரத்து 500 வகையான மீன் வகைகள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்ட மக்களுக்கு, மீன்பிடி தொழில் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. தமிழகத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் மீன்வளத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.எனவே இந்திய அளவில் தமிழக மீன்வளத்துறை முக்கிய பங்காற்றி வருகிறது.

 

 

Exit mobile version