முதன் முறையாக எடப்பாடியில் தொடங்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தை அனைவரும் பயன்படுத்தி அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி கேட்டுக்கொண்டார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில், நவீன மயமாக்கப்பட்ட டிஜிட்டல் நூலகத்தை, மாவட்ட ஆட்சியர் ரோகிணியும், நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வமும் துவக்கி வைத்தனர்.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சேலம் மாவட்டத்தில் முதன்முதலாக தமிழக முதலமைச்சரின் ஆலோசனைப்படி, எடப்பாடி நூலக வளாகத்தில் நவீன டிஜிட்டல் நூலகம் துவங்கப்பட்டுள்ளது என்றும், அதனை பொதுமக்களும், மாணவ மாணவிகளும் பயன்படுத்திக்கொண்டு, பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து, எடப்பாடி பேருந்து நிலையத்திலுள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.