நள்ளிரவில் காதைக் கிழித்தப் பாட்டு சத்தம் – கதவை திறந்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்த வெளிமாநில தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய உறவினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு, செம்மநத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதான கோண்டாபகனும் அவரது மனைவி சுதிகேன்ஸ் ஆகியோர், பணியாளர் குடியிருப்பில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

இந்தத் தம்பதியின் உறவினரான ஹைரா போத்ரே என்பவர், இவர்களின் குடியிருப்புக்கு அருகே உள்ள வீட்டில் தங்கியுள்ளார். இவர்கள் மூவரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். கடந்த 29 ஆம் தேதி மூவரும் மது அருந்திவிட்டு இந்தி பாடல்களை சத்தமாக வைத்துள்ளனர்.

அதனால், அக்கம்பக்கத்தினர் எரிச்சலைடைந்து எஸ்டேட் மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மேலாளர் சுனில்குமார், அங்கு வந்து கோண்டாபகன் – சுதிகேன்ஸ் தம்பதியின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார், திறக்காத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கோண்டாபகன் தலையில் வெட்டுப்பட்டும், அவரது மனைவி சுதிகேன்ஸ் கழுத்து அறுக்கப்பட்டும் சடலமாக கிடந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர்களுடன் மது அருந்திய உறவினரான ஹைரா போத்ரேவை காணவில்லை என்பதால் இருவரையும் அவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version