பிளாஸ்மா சிகிச்சை முறையின் முதற்கட்ட சோதனை வெற்றி!

தமிழகத்தில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட கொரோனா நோயாளியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்தான முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை குறித்து ஆராய்ச்சி செய்ய, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியது. அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனாவிலிருந்து குணமடைந்த 8 பேரின் ரத்தம் தானமாக பெறப்பட்டு, அதில் உள்ள பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, கொரோனா நோயாளி ஒருவருக்கு செலுத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், கொரோனா நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக, வயது விகிதாச்சார அடிப்படையிலும் மற்றும் Co morbid நோயாளிகளுக்கும் ஆய்வு செய்யவும் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

Exit mobile version