நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதே வேளையில் முத்தலாக் மசோதா உட்பட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன.
ஜூலை 26ம் தேதி மக்களவை கூட்டத்தொடர் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி தற்போது ஆகஸ்ட் 7தேதி வரை கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.