முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் : நாளை வாக்குப்பதிவு

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நாளை முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் 156 ஊராட்சி ஒன்றியங்களில் ஏற்கனவே பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்குப் பதிவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நான்கு வகையான வாக்குச் சீட்டுகளை தனித்தனியாகப் பிரிப்பது, வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்கான மறைக்கப்பட்ட தனி அறையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்தல் நடைபெறும் ஊரக பகுதிகளில் வெளியாட்கள் யாரும் இருக்கக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் இடங்களில் வெளியாட்கள் இல்லை என்பதை காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஊரக பகுதிகளில் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.

Exit mobile version