எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக இ-பாஸ் வழங்க முதலவர் பழனிசாமி உத்தரவு!!

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இ-பாஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வந்தது. நெருங்கிய உறவினர்களின் திருமணம், மரணம், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர்களுக்குத் திரும்புதல் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 17ம் தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எவ்வித தாமதமும் இன்றி இ-பாஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பிக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version