ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி:34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முடிவில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹேண்ட்ஸ்காம்ப் 73 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 289 ரன்கள் இலக்குடன், தவானும் , ரோகித் சர்மாகவும் களமிறங்கினர். இதில், தவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனார். அவரை தொடர்ந்து களமறிங்கி கேப்டன் விராட் கோலி 3 ரன்களிலும், அம்பத்தி ராயுடு ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமறிங்கிய தோனியும், ரோகித் சர்மாவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், ரோகித் சர்மா 133 ரன்களும், தோனி 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முடிவில், இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

Exit mobile version