ரஷ்யாவின் "ஸ்புட்னிக்-வி" தடுப்பூசியின் முதல் தொகுப்பு இன்று இந்தியா வருகை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவின் “ஸ்புட்னிக்-வி” தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமெடுத்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் “ஸ்புட்னிக்-வி” தடுப்பூசியின் முதல் தொகுப்பு, இன்று ஐதராபாத் வர உள்ளது.

இந்தியாவில் கோ வேக்சின், கோவி ஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், மூன்றாவதாக “ஸ்புட்னிக்-வி” தடுப்பூசியும் வருவதால், தடுப்பூசி போடும் இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மே மாதத்தின் தொடக்கத்தில் 2 லட்சம் தடுப்பூசிகளும், அடுத்த மாதம் 50 லட்சம் தடுப்பூசிகளும் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

Exit mobile version