மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் கணிசமான அளவு இடங்களை பிடிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. பாஜக இதுவரை ஆளாத மாநிலங்களில் மேற்கு வங்காளத்தில் அக்கட்சிக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இதனை தேர்தல் வெற்றியாக மாற்ற அக்கட்சி முயற்சித்து வருகிறது.
இதனிடையே யோகியை கடுமையாக விமர்சித்துள்ள மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேசத்தில் யோகி எங்கு போட்டியிட்டாலும் தோல்வியையே சந்திப்பார் என தெரிவித்துள்ளார். முதலில் உத்தரப்பிரதேசத்தை பாருங்கள் பிறகு மேற்கு வங்கத்தை பார்க்கலாம் என்றும் விமர்சித்துள்ளார்.