ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியலை இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு அளித்துள்ளது.
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, சுவிட்சர்லாந்து அரசு உதவியுடன் அந்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த பெயர் பட்டியலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, அந்நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டில் முடித்துவைக்கப்பட்டுள்ள கணக்கு விவரங்களின் முதல் பட்டியலை, சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவிடம் வழங்கியுள்ளது. மேலும் 2020 செப்டம்பர் மாதத்தில் 2-வது பட்டியலை வழங்க சுவிட்ஸர்லாந்து முடிவெடுத்துள்ளாதாக கூறப்படுகிறது.