ஜூலை மாதம் முதல் விமான டிக்கெட் கட்டணம் உயர்வு

ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் விமான டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. உள்நாட்டு பயணிகளுக்கு தற்போதைய பாதுகாப்பு கட்டணம் 130 என்றிருப்பது 150 ஆக உயர்த்தப்படுகிறது. வெளிநாட்டு பயணிகளுக்கு 3.25 டாலரில் இருந்து 4.85 டாலராக அதிகரித்து சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைச்சம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக, விமான டிக்கெட் கட்டணம் சிறிது உயரும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version