அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையிட்டது தொடர்பாக, ரஷ்யாவை சேர்ந்த பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்புக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் நவம்பர் 6ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா (Elena Alekseevna Khusyaynova) என்ற பெண் மீது முதன்முதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.