சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் தனது ஆட்டோவில் இலவச சவாரி வழங்கும் 76 வயது முதியவரின் முயற்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
டெல்லியில் 76 வயதான ஹர்ஜிந்தர் சிங் என்ற முதியவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். தினசரி சவாரி மேற்கொள்ளும் போது சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களை கண்டால், தனது ஆட்டோவில் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். மேலும், ஆட்டோவிலே முதலுதவி பெட்டியையும் வைத்து ஆட்டோ ஆம்புலன்ஸாக பயன்படுத்தி வருகிறார். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பணம் ஏதும் வாங்காமல் இலவசமாக அழைத்து செல்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹர்ஜிந்தர் சிங், சாலைகளில் பயணிப்பவர்கள் விபத்தைக் கண்டால், ஆம்புலன்ஸ்காக காத்திருக்க வேண்டாம் என்றும் தன்னார்வத்துடன் ஒவ்வொருத்தரும் உதவ முன் வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், இது போன்று மற்றவர்களுக்கு உதவி செய்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமனமே தனக்கு போதுமானதாக உள்ளதாகவும், தான் இவ்வாறு செய்வதன் மூலம் தன்னை பார்த்து மற்றவர்களும் உதவ முன் வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹர்ஜிந்தர் சிங்கின் இந்த புதுவித முயற்சி பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.