புதுச்சேரியில் சரவெடிகள் வெடிக்க தீயணைப்புத்துறை தடை

புதுச்சேரியில் சரவெடிகள் வெடிக்க தீயணைப்புத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் சரவெடிகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கு ராக்கெட் உள்ளிட்ட வெடிகள், சீன பட்டாசுகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டாசுகளை நடுவீதியில் வைத்து வெடிக்கக்கூடாது. குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கும்பொழுது பெரியவர்கள் உடனிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version