ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளதாகவும், தனது மகன் நிச்சயம் சுர்ஜித்தை மீட்பான் என தீயணைப்பு வீரரான நகைமுகன் தயார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுகாட்டுபட்டி கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தையை மீட்பதற்கு தீயணைப்பு வீரர்கள் 3 பேர் தயார் நிலையில் உள்ளனர். அந்த மூன்று பேரில் புதுகோட்டை மாவட்டம் மழையூரை சேர்ந்த நகைமுகன் என்ற வீரரின் தயார் நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சிறுவன் சுர்ஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என்பதே தங்கள் பகுதி கிராமத்தினரின் பிரார்த்தனையாக உள்ளதாகவும், தயார் நிலையில் இருக்கும் தனது மகன் நிச்சயம் குழந்தையை மீட்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.