நடனமாட மறுத்ததால் வாயில் துப்பாக்கிச் சூடு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் ஆடிய பெண் நடனத்தை நிறுத்தியதால் வாயில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகோட் பகுதியைச் சேர்ந்த கிராமத் தலைவர் சுதிர் சிங் என்பவரின் மகள் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.ஆடம்பரமாக நடைபெற்ற அந்தத் திருமணத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. மேடையில் விருந்தினர்கள் முன் பெண்கள் இசைக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பாட்டுச் சத்தம் நிற்கிறது. இதனால் அந்த பெண்கள் ஆடுவதை நிறுத்தியுள்ளனர். அப்போது மேடைக்கு அருகில் குடிபோதையிலிருந்த ஒரு நபர் நடனமாடும் பெண்களை நோக்கி, துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு ஆடுவதை நிறுத்தினால் சுட்டுவிடுவேன்’ என கூறியுள்ளார். இதனை கேட்ட பெண்கள் ஆட்டத்தை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்ப்பதற்குள் ஹினா என்ற பெண்ணை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து முகத்தில் குண்டு பாய்ந்த நிலையில் தற்போது கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கியால் சுட்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Exit mobile version